deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் ஜீ.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகளை 8 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்த முயற்சிக்கப்படும் எனவும், 10 மில்லியன் மற்றும் அதனிலும் கூடுதல் தொகை செலவிடப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்காக பத்து பில்லியன் ரூபாவிற்கு மேல் தேவைப்படும் என சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வார நாளில் நடத்துவதன் மூலம் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போக்குவரத்து செலவு, மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளை குறைக்க முடியும்.

இந்த தேர்தலுக்காக 200,000த்திற்கு குறைந்தளவு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், கடந்த 2018ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 250,000மாக காணப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு தேர்தல் செலவுகளை முடிந்தளவு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை இந்தியா செல்கிறார் – பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்பு

videodeepam

இந்திய இலங்கை கப்பல் போக்குவரத்து ஆரம்பம் – வரவேற்க தயாராகும் இலங்கை

videodeepam

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

videodeepam