deepamnews
இலங்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு 17ஆம் திகதியில்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடனான கலந்துரயாடல் நேற்று கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்றது.

ஒவ்வொரு மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

இந்தநிலையில், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் குழு, வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு மற்றும் பிரச்சார குழு என மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..! – சஜித் தெரிவிப்பு

videodeepam

ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் நாள் அறிவிக்கப்படும்

videodeepam

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

videodeepam