deepamnews
இலங்கை

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை இந்தியா செல்கிறார் – பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்பு

வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை 02 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் மாநாடடில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்தியாவில் தங்கவுள்ளார்.

Related posts

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் –  சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

videodeepam

புகையிரத அட்டவணையில் புதிய மாற்றம்

videodeepam