deepamnews
இலங்கை

புகையிரத அட்டவணையில் புதிய மாற்றம்

பெப்ரவரி மாதம் முதல் புதிய புகையிரத அட்டவணை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சர் தலைமையில் கூடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய புகையிரத கால அட்டவணையானது கிடைக்கக்கூடிய திறனுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், “எல்லா-ஒடிஸி” போன்ற சுற்றுலா அம்சங்களுடன் கூடிய தொலைதூர புகையிரத சேவைகளுக்கான டிக்கெட்டுகளை 100% ஆன்லைனில் ஆர்டர் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு அமைய ஊழியர்களின் ஓய்வு காரணமாக புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.

Related posts

போலி விசாவை பயன்படுத்தி  கனடா செல்ல முயன்றவர் கைது.

videodeepam

கரவெட்டி  நெல்லியடி நாவலர் மடம் பகுதியில் விபத்து – நால்வர் காயம்

videodeepam

பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய சிலுவையை உடைத்த இளைஞர் கைது!

videodeepam