deepamnews
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் மூன்றாம் காலாண்டுக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் மூன்றாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் இன்று(20) வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் : 

தற்போதைய காலகட்டத்தில் கல்விப்பொது தராதர 

சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளின் நிறைவில் மாணவர்களிற்கும் கல்விக்குமிடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. இதனால் எத்துறையிலும் ஈடுபாடற்ற நிலையில் மாணவர்கள் இருப்பதனால்  அவர்களது மனதில்  பாரிய தாக்கங்கள்  ஏற்படுகின்றன.

இவ் விடுமுறையினை சில பெற்றோர்கள் பயனுள்ளமுறையில் தம் பிள்ளைகளை வழிப்படுத்துகின்றனர். ஆயினும் இவ் வசதிவாய்ப்புக்கள் எல்லோரிற்கும் சாதகமாக அமைவதில்லை. VTA, NATIA ஊடாக குறுகிய கால கற்கைநெறிகளை வடிவமைத்து அவர்களை உள்வாங்க வேண்டும்.

மேலும் விளையாட்டுத் துறையில் சகல பெற்றோர்களும் தம் பிள்ளைகளை ஈடுபடுத்தவேண்டும். இது எல்லோரிற்கும் பொருந்தக்கூடியதொன்றாகும். இதனூடாகவே தோல்வி  – வெற்றி மனப்பாங்கினூடாக மன வலிமையை ஏற்படுத்த முடியும். அவர்களை ஆரோக்கியமுள்ளவர்களாகவும் மாற்றமுடியும். 

தற்கொலைகள் தொடர்பாக செய்திகளை சமூக ஊடகங்கள் பொறுப்புடன் அறிக்கையிட வேண்டும். குறிப்பாக தற்கொலை தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது கடிதங்கள், சுய விபரங்கள், புகைப்படங்களை வெளியிடும்போது அவை ஏனையவர்களின் மனதில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

சமூக ஊடகங்கள் சமூக முன்னேற்றங்களிற்கு அளப்பரிய பங்காற்றி வருகின்ற போதிலும், தற்கொலைகள் போன்ற செய்தி அறிக்கையிடல்கள் சமூகத்திற்கு எத்தகைய பணியை வழங்குகின்றன என்பதை நினைவிற்கொண்டு அறிக்கையிட வேண்டும். இது தொடர்பில் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மட்டத்தில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள், பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள், சுகாதாரம் மற்றும் உணவு, சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் இல்லங்கள், சிறுவர் தொழிலாளர்கள், தனியார் கல்வி நிலைய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதனைவிட, கல்வி தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை மற்றும் இடைவிலகல், Google form மூலம் வரவு ஒழுங்கின்மையான மாணவர்களின் தரவுகளை பெறல், பாடசாலை மட்ட சிறுவர் பாதுகாப்பு குழு, பாடசாலை கட்டாய கல்விக் குழு செயற்பாடுகள், பாடசாலை ஒழுக்காற்றுக் குழு செயற்பாடுகள், பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வலய கல்வி பணிமனை அதிகாரிகள், மாவட்ட தாய் சேய் நல வைத்திய அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், பதிவாளர்கள், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் பிரிவின் உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்

Related posts

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

videodeepam

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் பெறுவோரும் வரி செலுத்த வேண்டும்

videodeepam

2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் விடுதலை

videodeepam