deepamnews
இலங்கை

ஏற்றமடைந்த வேகத்திலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(27.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.

ரூபாவின் பெறுமதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக வீழ்ச்சிப் பதிவாகி வந்த நிலையில், நேற்று திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றையதினம் மீண்டும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (27.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.01 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 241.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.68 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 404.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related posts

அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை

videodeepam

இலங்கைத் தமிழரசுக் கட்சி இரண்டாக – மூன்றாக உடைவு – புளொட் தலைவர் சித்தர் கவலை.

videodeepam

வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு

videodeepam