deepamnews
இலங்கை

வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், கடற்படையினர், சுகாதார கல்வித் துறை அதிகாரிகள், வைத்தியர்கள், துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்

videodeepam

குழந்தையின்மை பிரச்சினைக்கான இலவச மருத்துவ முகாம்.

videodeepam

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த 1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

videodeepam