deepamnews
இலங்கை

கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு

தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்நிலப் பகுதிகளில் இருக்கின்ற மக்களின் வீடுகள் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு உரிய வடிகாலமைப்பு இல்லாமையால் வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உரிய வடிகாலமைப்பு இல்லாமையால் கடைகள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனை விட தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலை தொடருமானால் அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  

Related posts

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – எரிபொருள் விலை குறைப்பு

videodeepam

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

videodeepam

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

videodeepam