deepamnews
இலங்கை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை – தொடரும் கடும் மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இதனால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும்  அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

videodeepam

கற்பக விருட்சத்தின் நுங்கு விற்பனை சூடுபிடிப்பு!

videodeepam

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறையாது – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

videodeepam