deepamnews
இலங்கை

யாழில் நாளை கவனயீர்ப்பு போராட்டம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நாளை தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,
வடகிழக்கில் தொடர்சியாக காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராடவேண்டிய தேவையுள்ளது.

ஆகவே தமிழர்களின் உரிமைகளுக்காக  தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள்,அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

கடன் விவகாரங்களில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றத்தை வரவேற்கிறது சர்வதேச நாணய நிதியம்

videodeepam

இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கட்டாய நடைமுறை

videodeepam

யாழில் உள்ள வியாபார நிலையங்கள் மீது திடீர் சோதனை

videodeepam