வாகன இறக்குமதிக்கான குறிப்பிட்ட திகதியை என்னால் அறிவிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு உள்ள சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர் தீர்மானிக்கப்படும்.
இந்த நிலையில் வாகன இறக்குமதிக்கான ஒரு குறிப்பிட்ட திகதியை என்னால் அறிவிக்க முடியாது.
அவ்வாறு ஒரு குறிப்பிட்ட திகதியை அறிவித்தால் சந்தையில் வாகனங்களின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.