deepamnews
இலங்கை

தனிநபர் ஒருவர் யாழ் மாநகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்

தனிநபர் ஒருவர்  யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக இன்று (19) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும், இதனை மாநகர சபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நபருடன் யாழ்மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும்  குறித்த நபர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

Related posts

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam

இன்று முதல் பணிப்புறக்கணிப்பு – சமுர்த்தி வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

videodeepam

குருந்தூர் மலை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் விடுதலை

videodeepam