deepamnews
இலங்கை

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி

மலையகப் பகுதியில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 06 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்ததுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உடபுஸ்ஸலாவை பகுதியில் இன்று (05) அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையில் இடம்பெற்ற எரிபொருள் பவுசர் விபத்து ஒன்றில் சாரதி பலியாகி மேலும் இருவர் காயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் உடபுஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உடபுஸ்ஸல்லாவை பகுதியில் தொழிற்சாலை ஒன்றுக்கு எரிபொருள் கொண்டு சென்று அதனை இறக்கிவிட்டு வரும் போது பவுசர் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி பலியாகியுள்ளதுடன் கடும் காயங்களுக்கு உள்ளான மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் என்று பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துளளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடபுஸ்ஸல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை பொகவந்தலாவை கெம்பியன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து ஒன்றில் காயமடைந்த நான்கு பேர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (04) நேற்ற மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புரொட்டப் பகுதியிலிருந்து பொகவந்தலாவை பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு கெம்பியன் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை.

videodeepam

இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனம்

videodeepam

யாழில் இருந்து பெருமளவான ஆடுகளை கடத்தியவர் கைது!

videodeepam