deepamnews
இலங்கை

திலினியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட  நடிகை மற்றும் முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு

நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் நடிகை ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரனதுங்க ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் நடிகை ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரனதுங்க ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரனதுங்கவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, அந்த ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரனதுங்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை மற்றும் ஜீவன் குமானதுங்கவினால் தயாரிக்கப்பட்ட ஜீவா என்ற திரைப்படத்திற்கு அவர் நிதியுதவி வழங்கியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னதாக 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

videodeepam

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை நாணய நிதியம் விதிக்கவேண்டும் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

videodeepam

கொழும்பின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு.

videodeepam