deepamnews
இலங்கை

நான் சொல்வதே இங்கு நடக்கும்…! பிக்குவின் கதை அல்ல- அமைச்சர் டக்ளஸ் சீற்றம்.

நான் சொல்வதுதான் இங்கே நடக்கும். பிக்குவின் கதையைக் கருத்தில் எடுக்க முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நெடுந்தீவு பயணிகள் படகுச் சேவை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டபோதே அமைச்சர் இவ்வாறு கடுந்தொனியில் தெரிவித்தார்.

நெடுந்தீவு பயணிகள் படகுச்சேவை தொடர்பாக கூட்டத்தில் சுட்டிக்காட்டிய நெடுந்தீவுப் பிரதேச செயலர்,

நயினாதீவு பிக்கு தனது படகை குறிகாட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நிறுத்துகின்றார். இதனால் நெடுந்தீவு செல்லும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். கடற்படையினர் பிக்குவுக்குப் பயந்து எதுவும் கூறுவதில்லை என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், நீங்கள் என்ன சொன்னாலும் பிக்கு கேட்கமாட்டார் எனக் கூறினார்.

அதையடுத்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நான் சொல்வதுதான் இங்கே நடக்கும், பிக்கு சொல்வது அல்ல. அவரது படகு இனியும் அந்த இடத்தில் தரித்து நின்றால் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வேன். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) அங்கு நேரில் சென்று பார்ப்பேன் என்று கடும் தொனியில் குறிப்பிட்டார்.

Related posts

குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களை பதவி இடைநிறுத்த புதிய சட்டம்

videodeepam

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதியுதவி

videodeepam

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல்!

videodeepam