deepamnews
சர்வதேசம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை முற்றாக நிராகரித்துள்ளது அமெரிக்கா.

உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது.

இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி அறிவித்துள்ளார்.

அத்துடன், மனிதாபிமான உதவிகளை காசா பகுதிக்கு முன்னெடுக்கும் போது தாக்குதலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கலாம் என கிர்பி தெரிவித்துள்ளார்.

காசாவின் மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் படைகளை ஒடுக்காமல் போர் நிறுத்தம் என்பது இல்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், போர் நிறுத்தம் என்றால் இஸ்ரேல் ஹமாஸிடம் சரணடைய வேண்டும்  என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இந்த நிலையிலேயே அமெரிக்கா போர் நிறுத்த கோரிக்கை நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரின் வீடு முற்றாக தகர்க்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தபட்டமை தொடர்பில் பெரும் பங்கு இருக்கலாம் என நம்பப்படும் ஹமாஸின் மூத்த தலைவரான அரசியல் பிரிவு துணை தலைவர் சலே அல்-அரூரியின் வீடு தகர்க்கப்பட்டிருக்கிறது.

எனினும் அவர் தனது வீட்டில் இல்லை என்றும் லெபனானில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பல ஆண்டுகளாக தேடலில் இருப்பவருக்கு அமெரிக்கா 2018 இல் அவர் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

Related posts

நான்கு பிள்ளைகளை கொன்றதாக கைதான தாய் 20 வருடங்களின் பின் விடுதலை!

videodeepam

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 57 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

videodeepam

வளி மாசடைதலினால் ஐரோப்பாவில் வருடாந்தம் 1200 சிறார்கள் உயிரிழப்பு

videodeepam