deepamnews
சினிமா

ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தை பிடித்தது லியோ !!!

இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது விஜய்யின் லியோ திரைப்படம் .

பல இடங்களில் இதற்குமுன் மற்ற நடிகர்களின் படங்கள் செய்த வசூல் சாதனையை லியோ படம் முறியடித்து வருகிறது. நேற்று Gulf Countries-ல் ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து, அங்கு நம்பர் 1 இடத்தை பிடித்தது.இதை தொடர்ந்து விஜய்யின் கோட்டை என கூறப்படும் கேரளாவிலும் புதிய வசூல் சாதனையை லியோ படைத்துள்ளது. கேரளாவில் லியோ திரைப்படம் இதுவரை ரூ. 57.8 கோடி வரை வசூல் செய்துள்ளது.இதன்மூலம் ஜெயிலர் படத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடத்தை லியோ பிடித்துள்ளது. ஏனென்றால் ஜெயிலர் படம் கேரளாவில் ரூ. 57.4 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.

ஆனால், தற்போது லியோ ரூ. 57.8 கோடி வசூல் செய்து ஜெயிலர் வசூலை பின்னுக்கு தள்ளியது மட்டுமின்றி கேரளாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல நடிகை திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை.

videodeepam

நா ரெடி தான் வரவா’ பாடலை பிரதமர் நரேந்திர மோடி பாடினால் எப்படி இருக்கும் ?கற்பனை செய்த ரசிகர்!!!

videodeepam

ரஜினியின் 171வது படத்தை இயக்க போகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!!

videodeepam