deepamnews
இலங்கை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, அவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு உயர்பீடம் தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம் சட்டவிரோதமாக நாட்டிற்கு தங்கத்தைக் கடத்திய சம்பவம், கட்சிக்கும் சமூகத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, அவரது உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்ப்பு

videodeepam

ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்ற நால்வர் மீண்டும் பொதுஜன பெரமுனாவுக்கு சென்றனர்

videodeepam

100 லட்சம் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும் – வஜிர அபேவர்தன  நம்பிக்கை.

videodeepam