deepamnews
இலங்கை

பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்ப்பு

கலேவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 17 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவி கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும், இதற்கு முன் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணையின் போது இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலை மாணவியை அவரது தாயாரின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் அண்மையில் மீண்டும் இருவரும் வீட்டை விட்டு ஓடி, அந்த இளைஞனின் கிராமப் பகுதியான ஆண்தாவளயில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் தங்கியுள்ளனர். இதனை அறிந்த வீட்டார் அவர்களை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி.

videodeepam

கமல்ஹாசனுடன் சிறிதரன் எம்.பி சந்திப்பு

videodeepam

எமது நிலம் எமக்கு வேண்டும்-வெள்ளாங்குளம் பகுதியில் மக்கள் போராட்டம் முன்னெடுப்பு

videodeepam