இலங்கையில் தற்போது சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாடு குறித்து விவசாய திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரிசி மாபியாக்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளே அரிசித் தட்டுப்பாட்டுக்கு காரணம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் போதியளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் உள்ள போதிலும், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் கையிருப்பை மறைத்து வருவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சிறுபோகத்தில் கீரி சம்பா அறுவடை குறைவடைந்திருந்தாலும், அதற்கு முன்னதாக பெரும்போகத்தில் செய்யப்பட்ட அறுவடையில், கீரிசம்பா கையிருப்பு தற்போதைய காலத்திற்கும் போதுமானதாக காணப்பட்டதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.