கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக செய்கையில் ஈடுபடும் விவசாயிகளில், முதற்கட்டமாக 5760 பேருக்கு மானிய உரத்திற்கான கொடுப்பனவுகள் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதாவது கிளிநொச்சி கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள 1590 விவசாயிகளுக்கும், இராமநாத புரம் கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள 995 விவசாயிகளுக்கும், அக்கராயன் குளம் கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள 148 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், முழங்காவில் கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள 359 விவசாயிகளுக்கும், கண்டாவளை கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள 405 விவசாயிகளுக்கும், பரந்தன் கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரத்து 218 விவசாயிகளுக்கும், பூனகரி கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள 313 விவசாயிகளுக்கும், பளை கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள 256 விவசாயிகளுக்கும் உருத்திரபுரம் கம நலசேவை நிலையத்தின் கீழ் பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள 476 விவசாயிகளுக்கும் மானிய உரத்திற்கான கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.
அதாவது 2023/2024கால போகத்தில் விவசாயிகளுக்கு மானியமாக 1ஹெக்டேயருக்கு 15000.00 ரூபா வீதம் 1ஆம் கட்டமாக கடந்த 10.11.2023 ஆம் திகதி 2730 விவசாயிகளுக்கு 2792.6463 ஹெக்டேயருக்கு 41,889,694.50 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 13.11.2023 ஆம் திகதி 3030 விவசாயிகளுக்கு 3035.8627 ஹெக்டேயருக்கு 45,537,940.50 ரூபாவும் விவசாயிகளது வங்கி கணக்கிற்கு வைப்பிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.