deepamnews
இலங்கை

கொழும்பில் பாடசாலை மாணவர்களின் தவறான செயல்: உயிருக்கு போராடும் மாணவன்

பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, ​​அவரது தாய் வந்துவிட்டதால் ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன், தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது மாணவனின் தாயார் திடீரென வீட்டுக்கு வந்தபோது அவர்கள் தலைமறைவாக முயன்றதையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்த மாணவன் சுவர் உதவியால் கீழே இறங்க முயன்றபோது மூன்றாவது மாடிக்கு அருகில் கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மாணவனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம்.

videodeepam

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்

videodeepam

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி

videodeepam