deepamnews
இலங்கை

ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் – 30 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பிற்கு சென்றிருந்தபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மட்டக்களப்பு – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

Related posts

கடும்வறட்சி ஒருபுறம் காட்டு யானைகளின் தொல்லை மறுபுறம் விவசாயிகள் கவலை .

videodeepam

மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்யாமல் பொறுப்புடன் செயற்படுமாறு அரச அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!

videodeepam