deepamnews
இலங்கை

சீன எக்ஸிம் வங்கி – இலங்கை இடையிலான ஒப்பந்தம் பாரிஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்டது.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, பாரிஸ் கிளப் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மேற்கோள்காட்டி,  ப்ளூம்பெர்க் செய்தி சேவை இதனை தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் வழங்குனர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முன்கொண்டு செல்ல சீனாவின் நிலைப்பாட்டை இலங்கை எதிர்பார்த்திருந்தது.

இந்த நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தை இந்த வருட இறுதிக்குள் இலங்கை பெற்றுக்கொள்ளும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார் என  அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

videodeepam

சிவனொளிபாத மலையடிவாரத்தில் லிஸ்டீரியா நோயால் பெண் ஒருவர்  உயிரிழப்பு

videodeepam

யாழ்ப்பாண ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்.

videodeepam