deepamnews
இலங்கை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 7 பேர் இன்று தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்பாணத்தைச் சேர்ந்த குறித்த 7 பேரும் மன்னார் துறைமுகத்திலிருந்து நேற்று (26) இரவு புறப்பட்டு நள்ளிரவு 1 மணியளவில் தனூஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்தனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த மரைன் பொலிசார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

சுழிபுரம், தொல்புரம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாயவன் நாகராசா (வயது-43), அவரது மனைவி நாகராசா வனிந்தினி (வயது-38), மற்றும் அவர்களது பிள்ளைகளான அனோஜன் (வயது-13), கஜீவன் (வயது-9), தனுசிகா (வயது-4), அஜந்தன் (வயது-18) மற்றும் அவரது மனைவி கிசாளினி (வயது-17) ஆகியோரே இவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த நபர்களிடம் விசாரணை நடத்திய போது, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழமுடியாது தமிழ்நாட்டிற்கு தப்பித்து வந்ததாகவும், மன்னாரில் இருந்து நேற்று (26) இரவு 08.00 மணிக்கு இலங்கை ரூபாய் 1,50,000 கொடுத்து படகு மூலம் வந்ததாகவும் தெரிவித்தனர்.

Related posts

வடக்கு கிழக்கை முழுமையாக முடக்குவோம் –  சாணக்கியன் எச்சரிக்கை

videodeepam

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம்

videodeepam

இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா அனுமதி – தமிழக  அமைச்சர் தகவல்

videodeepam