deepamnews
இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தாமதமடைந்த நிலையில், தற்போது ஆரம்பமாகியுள்ளது.

திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பு, 11 மணியளவில் ஆரம்பமானதாக தெரியவந்துள்ளது .

கட்சியின் ஆதரவாளர்களுக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாதபிரதிவாதங்கள் காரணமாக வாக்கெடுப்பு தாமதமாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் 330 க்கும் மேற்பட்ட பொது சபை உறுப்பினர்கள் மாத்திரம் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
அதேவேளை, சில கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற காரணத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையால், தேர்தல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

Related posts

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam

மீண்டும் அதே இடத்தில் நாவலரின் திரு உருவப்படம் – ஆளுநரின் பணிப்புரையில் பொருத்தப்பட்டது

videodeepam

இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்.

videodeepam