deepamnews
இலங்கை

அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி! காலநிலை தொடர்பான அறிவிப்பு.

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அடுத் தமாதம் 350 மில்லியன் டொலர்கள்.

videodeepam

ஜெனிவாவில் இன்று வாக்கெடுப்பு – கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது இலங்கை

videodeepam

அச்சுவேலி போராட்டம் முடிவு – ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்கள் சந்திப்பு

videodeepam