deepamnews
இலங்கை

ஜெனிவாவில் இன்று வாக்கெடுப்பு – கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் நாளையுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், தீர்மானங்களும், வாக்கெடுப்புகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தின் இறுதி வரைவு, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையுடன் நேற்று ஐநா மனித உரிமைகள் பேரவையில், சமர்ப்பிக்கப்பட்டது.

பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, மலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய 7 நாடுகள் அனுசரணை வழங்கியுள்ள இந்த தீர்மான வரைவில்,

அல்பேனியா, ஒஸ்ரேலியா, ஒஸ்திரியா, பெல்ஜியம், பொஸ்னியா – ஹெர்சகோவினா, பல்கேரியா, குரோசியா, சைப்ரஸ், செக்கியா, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, கிறீஸ், பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, லத்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், மால்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, ஸ்லோவாக்கியா, போர்த்துக்கல், ருமேனியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, ஆகிய 30 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன.

இன்றைய வாக்கெடுப்பில் இலங்கைக்கு குறைந்தபட்ச ஆதரவே கிடைக்கும் என்று, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பில் 5 தொடக்கம் 10 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை காலத்திலும் இலங்கைக்கு கிடைத்த ஆதரவை விட குறைந்தளவு வாக்குகளே கிடைக்கும் என்று அரசாங்கத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், இந்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக் கொள்ளாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Related posts

 மக்களின் அழைப்பின் பெயரில் அம்பன் மணல் அகழ்விடங்களை பார்வையிட்ட சுமந்திரன் எம்.பி

videodeepam

சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகருக்கு விளக்கமறியல்

videodeepam

வவுனியாவில் போலி நாணயத்தாள் புழக்கம் – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்  

videodeepam