ஒற்றுமை முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஆனால், அவர் இன்னமும் பதவியேற்கவில்லை. அதிலும் ஒரு சிக்கல் ஒன்று இப்போது போய்க்கொண்டிருக்கின்றது.
அதாவது பதவியேற்பு வைபவம் அல்லது மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, அதில் என்ன நடக்கும் என்று நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் தமிழரசுக் கட்சி கூட்டைப் பற்றி கதைக்கலாம்.
அதைவிட முக்கியமான விடயமாக இப்போது தமிழரசுக் கட்சி இரண்டாக – மூன்றாக உடைந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. தமிழரசுக் கட்சியாக அதன் தலைவர் எடுக்கின்ற நடவடிக்கைகளை நிச்சயமாக மற்றைய குழு குழப்பிக் கொண்டே இருக்கும்.
ஆகவே, ஒற்றுமை முயற்சியிலே அது பாதகமான ஒரு பாதிப்பை கொடுக்கும் என்றுதான் நினைக்கிறேன். எனவே, முதலில் தமிழரசுக் கட்சியின் அந்த உடைவுகள் சரிக்கட்டப்பட வேண்டும்.
அவ்வாறு ஒன்றாகச் சீராக்கப்பட்டு அது ஒரு கட்சியாகத் திகழ வேண்டும். .” – என்றார்.