deepamnews
இலங்கை

தற்போது சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர் என்கிறார் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

தற்போது சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான பாதீட்டு ஒதுக்கம் குறித்த குழுநிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 400 அரசியல் கைதிகள் இருந்தனர்.

பின்னர் அந்த எண்ணிக்கை 110ஆக குறைக்கப்பட்டது.

அவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்காக கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட மேல் நிதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த எண்ணிக்கை 60ஆக குறைந்தது.

இந்தநிலையில் தற்போது 16 குற்றவாளிகளும் 15 சந்தேகநபர்களும் உள்ளனர்.

குறித்த வழக்குகளை விரைவில் நிறைவு செய்யுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

பம்மிங் வீதியில் முகமாலையில் விபத்தில் காயமடைந்தவர் மரணம்!

videodeepam

சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடும் அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

videodeepam

மக்களை தவறாக வழிநடத்தும் நபர்களை பொலிஸ் தேடும்: அமைச்சர் பிரசன்ன அறிவிப்பு.

videodeepam