deepamnews
இலங்கை

யாழிலிருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பமாகிறது

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாமன்றத்தில் நேற்று  நடைபெற்ற பாதீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து முதல் விமானம் இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி சர்வதேச விமான நிலையம் 2019 ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

எனினும், கொவிட் -19 தொற்று காரணமாக, அதன் செயல்பாடுகளை நிறுத்தப்பட்டது.

அத்துடன், சில இந்திய விமான நிறுவனங்கள் மீண்டும் சேவைகளை முன்னெடுக்க தயாரான போதிலும் சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அதற்கு சவாலாக அமைந்தது.

Related posts

ஒவ்வொரு வருடமும் எமக்கே பல்வேறு வகையிலும் சோதனை -விவசாயிகள் கவலை.

videodeepam

புகையிரதத்தின் கழிவறையில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது

videodeepam

புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு – மேலும் சில ஆளுநர்கள் நியமனம்

videodeepam