deepamnews
இலங்கை

ரணிலை ஜனாதிபதியாக தெரிவுசெய்தமை சிறந்த முடிவு –  கட்சிக்குள் பிளவு இல்லை என்கிறார் பசில் ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை மிகவும் சரியான தீர்மானம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் சுதந்திரமாக அரசியல் செய்ய இடமளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக தெரிவித்த அவர், தற்போது நாட்டில் அவ்வாறானதொரு சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக மையம் ஸ்தாபிக்கப்பட்டு நான்காம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியல் செய்வதற்கும் தேவையான செயற்பாடுகளை சுதந்திரமாக செய்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சி பிளவுபட்டுள்ளதாக சில கட்சிகள் மத்தியில் கருத்துக்கள் இருந்தாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு போதும் பிளவுபடவில்லை எனவும் ஒரு சிலர் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் கட்சி பிரதானமாக நாட்டு மக்களுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

13ஆவது திருத்தம்  அமைச்சரவைக்கு வருகிறது.

videodeepam

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள் இருவரின் கழுத்தில் காயம்

videodeepam

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு – ஜப்பானிய பிரதிநிதிகள் உறுதி

videodeepam