deepamnews
இலங்கை

வங்காள விரிகுடாவில் வலுவடையும் தாழமுக்கம் – மீனவர்களுக்கு   எச்சரிக்கை

இன்று  பிற்பகல் 3 மணி வரை அமுலிலிருக்கும் வகையில் மீனவர்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்பில் தற்போது மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களை விரைவில் கரைக்கு அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு பயணிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மன்னார் முதல் காங்கேசன்துறை வரை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தெற்கு அந்தமான் தீவு கடற்பகுதி மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கமானது இன்று  தாழமுக்கமாக வலுவடைவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி எதிர்வரும் 08ஆம் திகதி தமிழகக் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாளையும்  நாளை மறுதினமும் வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வீட்டின் பின்னால் குளித்துக் கொண்டிருந்தவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை!

videodeepam

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு – நேற்று முதல் நடைமுறை

videodeepam

அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் – சரத் பொன்சேகா

videodeepam