deepamnews
இலங்கை

வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று –  மாலை 5 மணியுடன் விவாதங்கள் நிறைவு

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார்.

அதன் பிரகாரம்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான 7 நாட்கள்  இடம்பெற்றன.

செவ்வாய்க்கிழமை மாலை  6 மணிக்கு  இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக  121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

 இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம்   கடந்த 23 ஆம்  திகதி  புதன்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று  மாலை 5மணியுடன் நிறைவடைந்ததுடன் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. 

Related posts

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 முதல் ஆரம்பம்

videodeepam

சிறிய நாட்டுடன் சீன கொள்ளும் ஆதிக்கம் அயல் நாட்டு உறவை பாதிக்கும் – வீ.ஆனந்தசங்கரி

videodeepam

22வது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று

videodeepam