deepamnews
இலங்கை

22வது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அது தொடர்பான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று, 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு சமகி ஜன பலவேகய மற்றும் சமகி ஜன கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எவ்வாறாயினும், தேவையற்ற திருத்தங்களைச் சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

Related posts

இடைநிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி! மூண்றாம் கட்ட அகழ்வு தொடர்பில் அறிவிப்பு.

videodeepam

கனேடிய அரசின் தடையை முற்போக்கு நாடுகளும் பின்பற்ற வேண்டும் – உலகத் தமிழர் பேரவை  அறிக்கை

videodeepam

இலங்கை கடற்படையினரால் சீன கப்பலின் 14 பணியாளர்களின் சடலங்கள் மீட்பு!

videodeepam