ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக தனது பெயரை விளாடிமிர் புடின் பதிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், புடினுக்கு வெற்றியை இலகுவில் தனதாக்கிக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் பதவியேற்றார்.
இந்த நிலையில், அவரது தற்போதைய பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, ரஷ்ய நாடாளுமன்ற மேல் சபை கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடத்துவது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, தனது கட்சி சார்பில் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக தன் பெயரை மத்திய தேர்தல் கமிஷனில் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானால், எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு வரை விளாடிமிர் புடின், ஜனாதிபதி பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.