deepamnews
இந்தியா

நான் ஆட்சிக்கு வந்தால் சி.எஸ்.கேவில்  11 வீரர்களும் தமிழர்கள் மட்டும்தான் – சீமான் அதிரடி அறிவிப்பு.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள்.”

– இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான்.

ஒத்தையடி பாதையில்தான் செல்வேன். 8 வழி சாலையில செல்வது தி.மு.க, பி.ஜே.பி. தான். சி.எஸ்.கேனு ஒரு கிரிக்கெட் அணி இருக்கிறது. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது.

நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன்.” – என்றார்.

Related posts

ஒடிசாவில் மீண்டும் தடம் புரண்டு ரயில் விபத்து..! அதிர்ச்சியில் மக்கள்..!

videodeepam

படகுகளை மீட்க தமிழக அரசு தலையிட வேண்டும் – தமிழக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

videodeepam

ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்துப் போட்டியிடுபவர் டெபாசிட் இழப்பார் – வைகோ பெருமிதம்

videodeepam