deepamnews
இலங்கை

அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் மற்றுமோர் இளைஞர் சாவு!

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மேற்படி நபர் நேற்றுமுன்தினம் இரவு உணவருந்தி விட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டார்.

காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, அண்மைய காலமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு போதைப் பயன்பாடு காரணமாக பலரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முறிகண்டி பகுதியில் விபத்து ஒருவர் ஸ்தலத்தில் பலி மற்றுமொருவர் படுகாயம்.

videodeepam

தேர்தல் நடைபெறுமா? இறுதி தீர்மானத்திற்காக நாளை கூடுகிறது  தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam

இனப்பிரச்சினையை தீர்க்க தமிழ் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் –  அரசாங்கம் கோரிக்கை

videodeepam