deepamnews
இலங்கை

இனப்பிரச்சினையை தீர்க்க தமிழ் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் –  அரசாங்கம் கோரிக்கை

அரச துறையில் உள்ள 15 இலட்சம் பணியாளர்களின் எண்ணிக்கையை அரச நிர்வாகத்தால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதன் காரணமாக அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது அரச பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு பதவி நீக்கம் செய்ய நேரிடும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த நிலையில், வெற்றிடமாகியுள்ள அத்தியாவசிய அரச சேவைகளுக்கான நியமனங்களை வழங்க முடியாத நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான பணியை அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது.

எதிர்க்கட்சியும், ஆளும் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நெருக்கடியான சூழலை வெற்றிக் கொண்டு நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.

நாடு எதிர்க்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இலகுவில் விடுப்பட முடியாது. ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களை மாத்திரம் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசியல் கட்சிகள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரபடகு

videodeepam

வீதிக்கு இறங்கிய மகிந்த ராஜபக்ச – காரணம் வெளியானது

videodeepam

தாலி செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுவிட்டு தண்ணி காட்டியவர் கைது!

videodeepam