deepamnews
இலங்கை

கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் ஆளுநர் அனுராதா யஹம்பத் – சாணக்கியன் குற்றச்சாட்டு

ஆளுநர் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் என்றும் அவரது செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்களாக இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை.

வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார்.

இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.

நாட்டில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது.

பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

மயிலந்துறை பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள்.

இச்செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்.

இவர்களை மீண்டும்  அழைத்து வருவதில்லை என பொறுப்பான தரப்பினர் கூறிய பின்னரே வழக்கை மீளப் பெற்றோம்.

தற்போது மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும்.” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,

“இவ்விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கிறோம்.

இவ்விடயத்தில் உணர்வுபூர்வமாகவும், பிரச்சினையற்ற வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கிறோம் என்றார்.

Related posts

தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லலை – சாம் ராஜசூரியர்

videodeepam

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை என்கிறார் நாலக கொடஹேவா

videodeepam

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்  – யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

videodeepam