deepamnews
இலங்கை

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடன் சுமையற்ற மற்றும் கடனை மீளச் செலுத்தக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கடவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விநியோக நிலையத்தை நேற்று முன்தினம் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடியதும் நாட்டுக்கு முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வரக்கூடியதுமான நிறுவனக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை முதலீட்டு சபையின் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரிவை, ஏற்றுமதி மேம்பாட்டு சபையுடன் இணைத்து பொருளாதார கூட்டுத்தாபனமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று வியட்நாம் 25 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றுள்ளது. இவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கிய இலங்கைக்கு இவ்வருடம் ஒரு பில்லியன் டொலர்களே கிடைத்துள்ளது. 2018 இல் அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றோம். அது 1.6 பில்லியன் டொலர்களாகும்.

அன்று சுற்றுலா குறித்து வழிகாட்டுதலை வழங்கிய வியட்நாம், 2018 இல் சுற்றுலா மூலம் 26 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. எங்களுக்கு 4.6 பில்லியன் டொலர் மட்டுமே கிடைத்தது. நாம் வியட்நாமைப் போல் வளர்ச்சி அடைந்திருந்தால், நாம் அனைவரும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றிருப்போம்.
இன்று வியட்நாமின் பொருளாதாரம் போர்மியுலா வன் பந்தயக் கார் போல் உள்ளது.

நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டி போல் உள்ளது. அப்படி இருப்பின் நாம் எப்படி சிங்கப்பூர் ஓட்டப் பந்தயத்திற்கு செல்வது? மற்ற நாடுகளுக்கு போர்மியுலா வன் பந்தயக் கார்கள் உள்ளன. நாங்கள் முச்சக்கர வண்டியில் சென்று போட்டியிடலாமா? மக்கள் தினமும் பயணம் செய்வதற்கே இது நல்லது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இது நன்றாக இருக்கிறது என்று மீண்டும் சொல்கிறேன். ஆனால் பந்தயத்திற்கு அது பொருந்தாது. நாம் எப்படி வெல்வது? அவ்வாறென்றால்  நாம் ஒரு பந்தய காரைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நல்ல இயந்திரம் இருக்க வேண்டும். அதாவது நல்ல பொருளாதாரம். அதுதான் இப்போது நாம் கட்டியெழுப்பும் பொருளாதாரம் எனவும் தெரிவித்தார்.

Related posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சர்ச்சை – சம்பந்தனின் அறிக்கை வரும்வரை காத்திருப்பு

videodeepam

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிப்பு

videodeepam

அடுத்த ஆண்டு முதல் தவணைப் பரீட்சைகள் இல்லை – கல்வி அமைச்சர்

videodeepam