deepamnews
இலங்கை

பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியது உலக உணவுத் திட்டம்

உலக உணவுத் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டினி மையங்களாக உள்ள 48 நாடுகளின் பட்டியலில்,  இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

2018 முதல் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டது.

எனினும் உக்ரைன் போரை அடுத்து நிலைமைகள் மோசமடைந்துள்ளது.

இதன் விளைவாக முன்னோடியில்லாத வகையில் 345 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளதுடன், அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் உடனடி ஆபத்தில் உள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் தகவல்களின்படி, உலகெங்கிலும் 828 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு இரவும் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள்.

இதன் தாக்கம் எங்கும் உணரப்படுகிறது. 48 நாடுகளில் இந்த துன்பம் மிக மோசமாக உள்ளது. என்றும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

உணவுப் பாதுகாப்பற்ற நிலை உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது.

மேலும் மிக உயர்ந்த, மிகமிக உயர்ந்த என மேலும் இரண்டு வகைகளுக்குள்ளேயும் நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் 48 நாடுகளின் பட்டியலில், தெற்காசியாவில் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

Related posts

தமக்கு உழைத்து தரவேண்டிய பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு .

videodeepam

அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – நாலக கொடஹேவா உறுதி

videodeepam

வடக்கு சுகாதார பணிப்பாளர்  வெளியேறினார் – ஆளுநர் அதிரடி

videodeepam