deepamnews
இலங்கை

பல கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது – பிரதமர் 

அரசியலமைப்பில் இல்லாத விடயங்களை தெரிவித்து நாட்டைத் தவறாக வழிநடத்த வேண்டாம். பொறுப்பற்ற வகையிலான கருத்துக்களை கூறி இளைஞர்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசாங்கம் கட்சிகள் பல இணைந்து இணக்கப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பாராளுமன்றத்தை  கலைக்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற வரவு -செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு எதிர்க்கட்சி எம் பி ஹர்ஷ டி சில்வா சபையில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். ஐக்கிய அமெரிக்காவைப் போன்று தேர்தலை நடத்துமாறும் அவர் கோரியிருந்தார். அமெரிக்க அரசியலமைப்பில் கூட இவ்வாறான விடயம் கிடையாது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

எமது அரசியலமைப்பில் இல்லாத விடயங்களை தெரிவித்து நாட்டைத் தவறாக வழிநடத்த அவர் முயற்சிக்கின்றார். பொறுப்பற்ற வகையிலான கருத்துக்களை கூறி இளைஞர்களை ஏமாற்ற முடியாது என்பதனை அவருக்கு நான்ணதெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த அரசாங்கம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, மகஜன எக்சத் பெரமுன, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈபிடிபி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான குழு ஆகியவற்றின் எம்.பிக்கள் இணைந்ததாக அமைக்கப்பட்ட கூட்டு அரசாங்கமாகும். இதனை நீங்களும் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். இது இணக்கப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட அரசாங்கமாகும். அதனைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு நீதிபதி விடயம் தொடர்பாக உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – மு.தம்பிராசா

videodeepam

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் முன்னோக்கி செல்வது பற்றி தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam

திலினியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட  நடிகை மற்றும் முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு

videodeepam