deepamnews
இலங்கை

இலங்கையில் 62 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மை நிலையில்- ஐ.நா அமைப்புகள் அறிக்கை

இலங்கையில், சுமார் 6.2 மில்லியனுக்கும் அதிகமானோர் மிதமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் 66 ஆயிரம் பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பும், உலக உணவுத்திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதியிலும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் தீவிர உணவுப்பாதுகாப்பின்மை நிலை மிக அதிகமாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப்பாதுகாப்பின்மை நிலவரம் ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் மோசமடையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தீவிர உணவுப்பாதுகாப்பின்மையால் வெகுவாகப் பாதிப்படையக் கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கு அவசர உணவு உதவிகளை வழங்குவதும் வாழ்வாதார செயற்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் அவசியம் என்றும் ஐ.நா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

பொருளாதார சவால்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தேவைக்கேற்றவாறு இறக்குமதி செய்யமுடியாத உயர் அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளன.

மரக்கறி, பழவகை உற்பத்தி மற்றும் தேயிலை, இறப்பர், தெங்கு, வாசனைத்திரவியங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிப் பொருள் உற்பத்தி என்பன சராசரி அளவை விடக் குறைந்தமையால் நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த 2021 இன் இறுதிக்காலாண்டு முதல் பெரும்பாலான உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதுடன் அவை கடந்த ஜுலை மாதம் வெகுவாக அதிகரித்து, ஆண்டுக்கு ஆண்டு உணவுப்பணக்கம் 90 சதவீதமாக உயர்வடைவதற்குக் காரணமாக அமைந்தன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காஸா மீது நடாத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியாவில் போராட்டம்.

videodeepam

பொலிஸாருக்கு வழிக்காட்டல் கோவை – ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை.

videodeepam

ஜக்கியமக்கள் சக்தியினர் மின்கட்டணதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்.

videodeepam