deepamnews
இலங்கை

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை  – பிரதமர் தினேஷ் குணவர்தன

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், விடுதலைப் புலிகளின் கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுதலை செய்திருந்தார் என்றும் எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

சண்டிலிப்பாயில் வீடொன்றின மீது தாக்குதல் ; ஒருவர் காயம் ; உடைமைகள் நாசம்

videodeepam

மாபியா போல் செயற்படும் தொல்லியல் திணைக்களம் – வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் காட்டம்

videodeepam

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் – பல  பிரதேசங்களில் கடும் மழை

videodeepam