deepamnews
இலங்கை

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரவுள்ளது.

தமக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று அதன் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ம தெரிவித்தார்.

72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் நேற்றுக் காலை 6 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி மேற்படி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சில் இணக்கம் ஏற்படாத நிலையில், மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

2023 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

videodeepam

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு..!

videodeepam

இலங்கைக்கு எதிரான ஐ.நா.இன் புதிய தீர்மானம் IMFஇன் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 

videodeepam