deepamnews
இலங்கை

ஐரோப்பா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கட்டுநாயக்கவில் கைது.

போலி கிரேக்க வீசாமூலம் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல வந்த வர்த்தக குடும்பம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் ஒரு கோடி நாற்பது லட்சம் ரூபாவை தரகர் ஒருவரிடம் செலுத்தி அதற்குரிய போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் 43 வயதுடைய தந்தை, 47 வயதுடைய தாயார் மற்றும் 21 மற்றும் 16 வயதுடைய 2 மகன்கள் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

Related posts

திருகோணமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை இந்திய நட்புறவு அக்கடமிக்கு அடிக்கல்

videodeepam

இலங்கை சிறுவர்கள் மத்தியில் பரவும் ஆபத்தான நோய் – சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கை

videodeepam

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியிருக்கா விட்டால் இலங்கையில் தமிழினம் இல்லாமல் போயிருக்கும் – சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தெரிவிப்பு

videodeepam