deepamnews
இலங்கை

அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதற்கு முன்னமே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருந்ததாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோதே தாம் இதனை வலியுறுத்தியதாகவும் ஆனால் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அதனை எதிர்திருந்தாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டள்ளார்.

தற்போது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாடு வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர், சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதை தவிர வேறு வழியில் என குறிப்பிடுவதாக கஜேந்திரகுமார் குற்றம் சுமத்தியிருந்தார்.

சர்வதேச நாணயநிதியத்தின் பணியாளர் மட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் கோரிய போதும் அரசாங்கம் அதனை இரகசியமாகவே வைத்திருந்தாகவும் அனால் தற்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் நாடாளுமன்றதின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக தற்போது எதிர்கட்சியை அச்சுறுத்தும் வகையில் செய்படுவதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போலி நாணயத்தாள் அச்சடிக்கும் இயந்திரத்துடன் ஒருவர் கைது

videodeepam

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸிற்கு அளித்த உறுதிமொழி

videodeepam

உயர் தர பரீட்சைக் காலத்தில் மின் வெட்டு – அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

videodeepam