மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார்.
எனினும் இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்கும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.
உண்மையான செலவுக் குறைப்புடன் ஒப்பிடும் போது மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு சரியான தரவுகளை சமர்ப்பிக்குமாறு
இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.