deepamnews
இலங்கை

ஜனவரியில் அதிகளவில் குறைவடையும் மின்சார கட்டணம்.

அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட அதிகமான கட்டணக் குறைப்பை எதிர்வரும் ஜனவரியில் மேற்கொள்ள எதிர்பாரக்கிறாேம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். இதன்போது அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாமல் நாம் சர்வதேச கடன் வழங்குனர்களிடம் கடன் மறுசீரமைப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

எமக்கு கடன் ஒத்துழைப்பை வழங்குவோர், இனியும் வழங்கவுள்ளவர்கள் அவ்வாறு நாம் செயற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வார்களா என்று சிந்திக்க வேண்டும்.

மேலும் நாம் தற்போது மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளோம். இதைவிட அதிகமாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நெருக்கடியான காலங்களிலும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் தற்போது மக்களுக்கு பலன் தர ஆரம்பித்துள்ளதுள்ளது.

ஜூன் மாத இறுதியில் நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் என கடந்த இரு வாரங்களாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வந்தனர். எனினும் அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களால் அவ்வாறு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.

videodeepam

விசேட சுற்றிவளைப்பில் 913 சந்தேகநபர்கள் கைது.

videodeepam

கடற்கரைகளில் ஆபத்து – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

videodeepam